மன்னிப்பு கேட்க ராகுல் சாவர்க்கர் அல்ல! ராகுல் காந்தி! டெல்லியை தெறிக்க விட்ட போராட்டம்!

16 December 2019 அரசியல்
rahulgandhi121.jpg

கடந்த சனிக்கிழமை அன்று, டெல்லியில் பாரத் பச்சோ என்ற போரட்டமானது, ராம்லீலா மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அதில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் பங்குபெற்றனர். அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அந்தப் பேச்சு தான் தற்பொழுது, மீடியாவில் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங்கில் உள்ளது.

பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவில் இல்லை எனவும், ரேப் இன் இந்தியா திட்டமே உள்ளது எனவும், இந்தியாவில் பாரதிய ஜனதா ஆட்சியில் கற்பழிப்புகள் மற்றும் பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள் அதிகரித்து விட்டன எனவும், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

இதற்கு, நாடாளுமன்றத்தில், ஸ்மிருதி இராணி உட்பட பல பாஜக எம்பிக்கள் ராகுல் காந்திக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இது குறித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தன்னுடைய இந்தப் பேச்சிற்கு, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என, பாஜகவினர் வலியுறுத்தினர்.

இதனிடையே, டெல்லியல் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மன்னிப்பு கேட்பதற்கு நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி என ஆவேசமாகப் பேசினார். மேலும் பேசிய அவர், நான் நேர்மையாக, உண்மையாகப் பேசினேன். அதனை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இதற்காக, நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்.

நாட்டினை மோடி நன்றாக வழிநடத்துவார் என வாக்களித்தீர்கள். ஆனால், அவர் நாட்டினை அழிவின் பாதைக்கு வழி நடத்துகின்றார். இந்தியாவின் பொருளாதாரத்தினை அழிக்க, அந்நிய சக்திகள் தேவையில்லை, மோடி ஒருத்தரேப் போதும் என்றார். நாட்டில் பிரிவினைவாதத்தினை தூண்டி, நாட்டினை நாசம் செய்யப் பார்க்கின்றது பாஜக என, ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்தக் கூட்டத்தில், டாக்டர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உட்பட பலரும் பேசினர்.

HOT NEWS