விமானப் படையில் இணைந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்!

02 September 2019 அரசியல்
apachehelicopter.jpg

இந்திய விமானப் படையில், இன்று 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டன.

அமெரிக்காவில் உள்ள, போயிங் விமான நிறுவனம் பல ஹெலிகாப்டர்களைத் தயாரித்து, உலகம் முழுவதும் விற்று வருகிறது. இந்நிறுவனத்திடம், மத்திய அரசு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்கியிருந்தது.

அவைகள் இந்த ஆண்டு, இந்தியா வந்து சேர்ந்தன. இருப்பினும், இந்திய இராணுவத்தில் சேர்ப்பதற்கு முன், பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, இணைத்துக் கொள்ளப்படும். இந்நிலையில், இன்று காலை எட்டு ஹெலிகாப்டர்களும், வேத மந்திரங்கள் முழங்க, தண்ணீர் மரியாதை செலுத்தப்பட்டு, இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் விமானதளத்தில் நடைபெற்றது. இதில், இந்திய விமானப்படை தளபதி திரு.பிஎஸ்.தனோவோ தலைமை தாங்கினார். அவர் முன்னிலையில், இந்த விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டனர். விரைவில் ஆர்டர் செய்ததில், மீதியுள்ள ஹெலிகாப்டர்களையும், இந்தியாவிற்க வழங்க உள்ளது போயிங்.

இத்தகைய ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் இருப்பது, இந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்கக் கூடியதாக இருக்கும் என்பதில், எவ்வித சந்தேகமுமில்லை.

HOT NEWS