கணித மாதிரிகள் முடிவுகள் தவறு! ஐசிஎம்ஆர் பல்டி பதில்!

30 June 2020 அரசியல்
icmr.jpg

கணித மாதிரிகளின் மூலம் கிடைத்தப் பதில்களும், முடிவுகளும் தவறானதாக இருப்பதாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையினை இழந்துள்ளனர். நாடு முழுவதும் 6ம் கட்ட ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், இந்தியா பெரும் பொருளாதார இழப்பினைச் சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியாவின் மருத்துவ அமைப்பான, ஐசிஎம்ஆர் தினமும் கொரோனா பரவல் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்துவது குறித்தும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.

அதன்படி, இன்று அது அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், நாம் பயன்படுத்தியக் கணித மாதிரிகள், தவறானப் பதிவினை தந்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளது. ஒரு சிலக் கணித மாதிரிகள் ஜூன் மாதத்தில் இந்த வைரஸ் பரவல் அதிகரித்துப் பின்னர், படிப்படியாகக் குறையும் எனவும், ஒரு சிலக் கணித மாதிரிகள் ஜூலை மாதத்தில் அதிகரித்து முடியும் எனவும், ஒரு சிலக் கணித மாதிரிகள் ஏற்கனவே, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாகவும் கூறியுள்ளதாகவும், மொத்தத்தில் இவைகள் தவறானப் பதிவுகளைத் தந்துள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

HOT NEWS