அறிகுறி இல்லாமலே இந்த வைரஸ் பரவுகின்றது! இந்தியா தகவல்!

20 April 2020 அரசியல்
coviddistance.jpg

இந்தியா முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது வரை 17,265 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 2,547 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 543 பேர் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுது பரவி வருகின்ற கொரோனா வைரஸானது அறிகுறிகளுடன் பரவுவதில்லை என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மூத்த விஞ்ஞானியான டாக்டர் ராமன் கங்காகேட்கர், கொரோனா வைரஸைக் கண்டுபிடிப்பது சற்று சவாலாக இருப்பதாகத் தெரிவித்தார்.

தற்பொழுது அறிகுறிகள் வெளிப்படுத்தாமல் இந்த வைரஸானது பரவி வருவதால், இதனை கண்டுபிடிப்பதும் அதனைக் குணப்படுத்துவதும் சற்று சிக்கலாக உள்ளது எனவும், இதனைக் கண்டுபிடிக்கும் வழிமுறைகளை மாற்றுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனும் கவலைத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS