5 ஆண்டுகளாக தொடர்ந்து ஐஐடி மெட்ராஸ் முதலிடம்!

12 June 2020 அரசியல்
iitmadras.jpg

இந்தியாவின் சிறந்தக் கல்வி நிறுவனமாக, தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சிறந்த பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை இந்தியாவின் மனித வள மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், நேஷனல் இன்ஸ்ட்டிடியூசனல் ரேங்கிங் ப்ரேம்ஒர்க் அமைப்பானது கணித்து வருகின்றது. மொத்தம் 5 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, பத்து பிரிவுகளின் கீழ் இந்த பட்டியலானது உருவாக்கப்பட்டு வருகின்றது.

அந்தப் பட்டியலானது, தற்பொழுது வெளியாகி உள்ளது. அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தலைமையிலானக் குழுவானது, இந்தப் பட்டியலை வெளியிட்டது. இதில், தமிழகத்தில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐஐஎஸ் பெங்களூரு இரண்டாம் இடத்திலும், ஐஐடி டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளன.

ஐஐடி பாம்பே 4ம் இடத்திலும், ஐஐடி காரக்பூர் 5ம் இடத்திலும், ஐஐடி கான்பூர் 6ம் இடத்திலும், ஐஐடி கௌகாத்தி 7ம் இடத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் எட்டாம் இடத்திலும், ஐஐடி ரூர்க்கீ 9ம் இடத்திலும் மற்றும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் 10வது இடத்திலும் உள்ளன.

HOT NEWS