ஐஐடி மாணவர்கள் போராட்டம் வாபஸ்! மூன்று பேராசிரியர்களுக்கு போலீஸ் சம்மன்!

20 November 2019 அரசியல்
fathima-latheef.jpg

சென்னை ஐஐடி கல்லூரியில் படித்து வந்த பாத்திமா லத்தீப், தன்னுடைய விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தற்பொழுது பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஐஐடி நிர்வாகிகள் பாரபட்சம் பார்ப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே, ஜஸ்டின் ஜோசப் மற்றும் அசார் மொய்தீன் என்ற இரண்டு மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக, ஐஐடியின் டீன் வாக்குறுதி அளித்தை அடுத்து, அவர்கள் தங்களுடையப் போராட்டத்தினை வாபஸ் பெற்றனர்.

ஐஐடியில் விசாரணை நடத்த வேண்டும். மாணவர்களிடம் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்த வேண்டும் மற்றும் ஐஐடி மாணவர்களின் மனநிலையினை சோதிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த மாணவர்கள் போராட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாத்தீமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, தற்பொழுது ஐஐடியில் பணிபுரியும் மூன்று ஆசிரியர்களுக்கு போலீசார் நேரில் ஆஜராகி, விளக்கமளிக்கும்படி, சம்மன் அனுப்பியுள்ளனர்.

HOT NEWS