இஞ்சி இடுப்பழகி இஸ் பேக்! சிக்கென வந்த இலியானா!

03 March 2020 சினிமா
ileanadcruz.jpg

இருக்கானா இடுப்பிருக்கானா, இல்லையானா இலியானா என, நண்பன் திரைப்படத்தில், ஷங்கர் இலியானாவிற்காக பிரத்யேக காட்சியினை வைத்திருந்தார். அவ்வளவு சிறிய இடைக்குச் சொந்தக்காரர் நடிகை இலியானா.

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல திரைத்துறைகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் திடீரென்று, உடல் எடைக் கூடியதும் அவரை சினிமாத் துறையினர் ஒதுக்கிவிட்டனர். அவரும், உடல்எடைக் கூடியதால், பெரும்பாலான திரைத்துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார்.

தொடர்ந்து காதல் தோல்வி உட்பட பலப் பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளான இலியானா, தற்பொழுது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். உடல் எடையைக் குறைத்து, பிகினியில் மிகவும் சிக்கென இருக்கின்றார். இதனால், இலியானாவின் ரசிகர்கள் மீண்டும் குஷியாகி உள்ளனர்.

எது எப்படியோ, மீண்டும் இலியான நடிக்க வந்து, அந்த பெல்லி டான்ஸினை ஆடினால் சரி தான்!

HOT NEWS