இந்தியாவின் பொருளாதாரத்தினை உடனடியாக சரி செய்யுங்கள்! இல்லாவிட்டால் அவ்வளவு தான்! ஐஎம்எப் கவலை!

14 February 2020 அரசியல்
imflogo.jpg

இந்தியாவின் பொருளாதாரத்தினை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, சர்வதேச நிதி நிர்ணய அமைப்புத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்பொழுது, பொருளாதார மந்த நிலை நிலவி வருகின்றது. இந்தியாவின் மத்திய பட்ஜெட்டானது, சென்ற மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, பலரும் இந்த பட்ஜெட்டினை பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் பொருளாதார தேக்கமோ, மந்தமோ இல்லை என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருந்தார்.

ஆனால், தற்பொழுது இந்தியாவின் பொருளாதாரமானது உடனடியாக, சரி செய்யப்பட வேண்டி உள்ளது. இல்லையென்றால், அதன் விளைவு மிக மோசமானதாக இருக்கும் என உலக நிதிநிர்ணய அமைப்பான ஐஎம்எப் அறிவித்துள்ளது. அதன் செய்தித்தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் கூறுகையில், நாங்கள் முன்னாள் கணித்ததை விட, மிக மோசமான நிலையில் தான் இந்தியாவின் பொருளாதாரம் உள்ளது.

தற்பொழுது நிலவும் பிரச்சனைகளை மனதில் வைத்து, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தற்பொழுது உடனடித் தேவையாக, தீவிர மாற்றம், மத்திய தொழில் பிரிவினரின் மேன்மை, வங்கிகளில் மாற்றம் உள்ளிட்டவைத் தேவைப்படுகின்றது. சென்ற ஆண்டினைக் காட்டிலும், இந்த ஆண்டு கடினமாகவே இருக்க உள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, 4.8 சதவிகிதமாக உள்ளது என தெரிவித்து இருந்தார். தற்பொழுது, அதற்கும் குறைவாகத் தான் இந்தியாவின் பொருளாதாரம் உள்ளது, எனத் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS