இம்ப்ரோ மருந்து நோய் எதிர்ப்பு சக்தி உடையது! தமிழக அரசு பதில்!

01 July 2020 அரசியல்
coronatest.jpg

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவரால் தயாரிக்கப்பட்ட இம்ப்ரோ மருந்தானது, நோய் எதிர்ப்பு சக்தி உடையது என, தமிழக அரசு நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, ஒரு கோடி பேருக்கும் அதிகமானோரிடம் பரவி உள்ளது. அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும், விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்பிரமணியன் புதிதாக மருந்து ஒன்றினைக் கண்டுபிடித்திருந்தார்.

இம்ப்ரோ எனப் பெயரிடப்பட்டு இருந்த இந்த மருந்தில், 66 மூலிகைகளைப் பொடியாக்கி இம்ப்ரோ பொடியினை உருவாக்கி இருந்தார். இந்தப் பொடியினை நுண்ணுயிர் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, சித்தா, யுனானி, ஆயுர்வேதா மருத்துவர்களைக் கொண்ட குழுவினை தமிழக அரசு அமைக்க வேண்டும் எனவும், இந்த இம்ப்ரோ பொடியினை சோதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

இந்த சூழ்நிலையில், நேற்று நீதிமன்றத்தில் இது தொடர்பாக மீண்டும் விசாரிக்கப்பட்டது. அப்பொழுது, தமிழக அரசு சார்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த இம்ப்ரோ மருந்துப் பொடியானது, கிருமியினைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்தது எனக் கூறியுள்ளது. மேலும், இதனை அடுத்தக் கட்ட சோதனைக்காக மத்திய ஆயுர்வேதம் சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளது.

HOT NEWS