பிரான்ஸ் அதிபர் இஸ்லாமியர்களை அவமதிக்கின்றார்! இம்ரான் காட்டம்!

01 November 2020 அரசியல்
imrankhan.jpg

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இஸ்லாமியர்களின் மனதினைப் புண்படுத்தி விட்டதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பத்திரிக்கை ஒன்று, இஸ்லாமியர்களின் முக்கிய குருவாகப் பார்க்கப்படுகின்ற முகம்மது நபி குறித்து, கேலி சித்திரத்தினை வெளியிட்டது. அதற்குப் பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை பிரான்சில் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், அந்தப் பத்திரிக்கைக்கு ஆதரவாகவும், இஸ்லாமியர்களை இழுவுபடுத்தும் விதமாகவும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் சர்ச்சைக்குரிய பதிவினை வெளியிட்டார்.

இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்துப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமியர்களின் மனதினை மேக்ரோன் புண்படுத்திவிட்டார் என, கூறியுள்ளார். பிரான்ஸ் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டு வர, அரபு நாடுகள் முடிவு செய்துள்ளன. பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளன. இஸ்லாமிய மதம் இழிவுபடுத்தப்படுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என, அரபு அரசுகள் தெரிவித்து உள்ளன.

HOT NEWS