கடன் வாங்கி வரலாறு படைத்த இம்ரான் கான்!

12 October 2019 அரசியல்
imrankhanspeechlatest.jpg

காஷ்மீர் தான் கையை விட்டுப் போய் விட்டது என்றால், கடனும் எல்லை மீறிப் போய்விட்டது, இம்ரான் கானின் தலைமையிலான பாகிஸ்தானிற்கு.

இம்ரான் கான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், கிட்டத்தட்ட 7500 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயை கடனாகப் பெற்றுள்ளார். இதனை பாகிஸ்தான் ஊடகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து, உலக நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் ஆகியவையின் காரணமாக, பல உலக நாடுகளும் பொருளாதார பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.

இதில் பாகிஸ்தானும் சிக்கியுள்ளது. இதனை சமாளிக்கும் பொருட்டு, வெளிநாடுகளில் 2,804 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயும், 4,705 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயை உள்நாட்டு வங்கிகளில் இருந்தும், பெற்றுள்ளது. இதனை அந்நாட்டில் இயங்கி வரும், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் வங்கி, இம்ரான் கானின் அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளது.

ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலத்திற்குள், இவ்வளவு கடன் வாங்கியுள்ள முதல் பாகிஸ்தான் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS