இம்ரானின் கோரிக்கையை மறுத்த சீனா! அடுத்த என்ன தான்யா செய்வார்?

09 October 2019 அரசியல்
imrankhan10.jpg

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்க மறுத்தது சீனா.

இரண்டு நாள் பயணமாக, சீனாவிற்கு சென்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். அங்கு, சீன அதிபர் ஜி ஜிங் பிங்கை சந்தித்து, காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு கோருவதற்காக, அங்கு பயணம் செய்துள்ளார்.

நேற்று, பெய்ஜிங் நகரினை சென்றடைந்த இம்ரான், சீன அதிபரைச் சந்தித்துள்ளார். சீன அதிபரிடம், பாகிஸ்தானிற்கு காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு கோரியுள்ளார். ஆனால், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண, சீனா அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், கடும் அதிருப்பிதியில் இருக்கின்றாராம் இம்ரான் கான். சீனாவினை நம்பியே, பாகிஸ்தான் தற்பொழுது இந்தியாவினை எதிர்த்து வருகின்றது. தற்பொழுது சீன அதிபர் இந்தியாவிற்கு வருகைத் தர உள்ளதால், இந்தியாவிற்கு எதிராக எதுவும் செய்ய இயலாது என, சீன உறுதியுடன் உள்ளது.

இந்த முடிவால் பாகிஸ்தானிற்கு, கடும் நெருக்கடி உருவாகி உள்ளது. இம்ரான் கான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று ஏற்கனவே, திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS

S