இந்தியாவின் மீது மோசமானத் தாக்குதல்! ஐநாவில் பேசிய இம்ரான் கான் எச்சரிக்கை!

28 September 2019 அரசியல்
imrankhanangry.jpg

சர்வதேச தலைவர்கள் கலந்து கொண்டுள்ள, ஐநா சபைக் கூட்டத்தில், நேற்று பாரதப் பிரதமர் மோடியும், பாகிஸ்தன் பிரதமர் இம்ரான் கானும் பேசினார்.

பிரதமர் மோடி 15 நிமிடங்கள் உரையாற்றினார். அனைத்துத் தலைவர்களுக்கும் 15 நிமிடங்கள் மட்டுமே, ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இம்ரான் கான் சுமார் 40 நிமிடங்கள், மூச்சுத் திணறத் திணற பேசினார்.

அப்பொழுது அவர் பேசுகையில், தன்னை விட ஏழு மடங்கு சிறிய நாட்டுடன் மோதும் பொழுது, அந்த சிறிய நாடு ஒன்று சரணையும், அல்லது தன்னுடைய இறுதி நாள் வரைப் போறிடும் என்றார். என்னைப் பொறுத்த வரையில், கடைசி வரையில் போராடும் என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய, இரண்டு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. அவைகளை அந்நாடுகள் பயன்படுத்தி, சண்டையிடும் பொழுது, கண்டிப்பாக சர்வதேச அமைப்புக்கு பெரிய கஷ்டத்தை அது ஏற்படுத்தும்.

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், அணு ஆயுதப் போர் தொடங்கிவிட்டால், அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அதன் விளைவு மட்டும் மிக மோசமானதாக இருக்கும் என்பதில், மாற்றுக் கருத்துக் கிடையாது.

மேலும், குல்பூதின் ஜாதவ் ஒரு இந்திய உளவாளி. அவரை எங்கள் நாட்டில் இருந்து வெளியில் அனுப்ப இயலாது என்றும் கூறினார். கிட்டத்தட்ட நேரடியாக இந்தியாவிற்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளதாகவே, அனைத்து நாடுகளும், ஊடகங்களும் பார்க்கின்றன.

HOT NEWS