இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக, ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து, நீடிக்கின்றார்.
போர்பஸ் இந்தியா செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவின் தலைசிறந்த பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம், தனிப்பட்ட சொத்துமதிப்பு, ஷேர்மார்க்கெட் நிலவரம், கடன் மற்றும் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் மற்றும் கணக்கு ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தப் பட்டியலை உருவாக்கி உள்ளது.
இந்தப் பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 51.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன், முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, கௌதம் அதானி 15.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மூன்றாம் இடத்தில் ஹிந்துஜா பிரதர்ஸ் குழு உள்ளது. அதன் சொத்து மதிப்பு, சுமார் 15.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
பாலோன்ஜி மிஷ்த்ரி 15 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன், நான்காம் இடத்தில் உள்ளார். உதய் கோடாக் 14.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஐந்தாம் இடத்திலும், ஷிவ் நாடார் 14.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஆறாம் இடத்திலும் உள்ளனர்.
ஏழாம் இடத்தில், 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ராதாகிஷான் தமானி உள்ளார். எட்டாம் இடத்தில் 12 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன், கோத்ரேஜ் பேமிலி உள்ளது. ஒன்பதாம் இடத்தில், 10.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் லஷ்மி மிட்டல் உள்ளார். பத்தாவது இடத்தில், 9.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் குமார் பிர்லா உள்ளார்.