இந்தியாவின் பிரபலமான பிராண்ட்டுகள் பற்றி, யூகௌ ஷோவ்ஸ் என்ற நிறுவனம் ஆராய்ச்சி செய்தது. அவர்கள் சுமார் 1000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது.
அதில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, இந்திய அளவில் அதிகப் பிரபலமடைந்துள்ளது. அந்நிறுவனத்தினை 41% மக்கள் விரும்புகின்றனர். அதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனத்தினை 34% மக்கள் விரும்புகின்றனர். தொலைத்தொடர்புத் துறையில் இப்படி போட்டி என்றால், பணப்பரிமாற்றத்தில் பேடிஎம் நிறுவனம் 42% மக்கள் ஆதரவினைத் தற்பொழுது பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து மேக்மை டிரிப் நிறுவனம் 34% மக்கள் ஆதரவினைப் பெற்றுள்ளது.