55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதி! அரசு அனுமதி!

17 April 2020 அரசியல்
hydroxychloroquine.jpg

இந்திய அரசாங்கம், தற்பொழுது 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, தற்பொழுது வேகமாகப் பரவி வருகின்றது. இதானல், ஒன்றரை லட்சம் பேர் மரணமடைந்து உள்ளனர். இந்த நோயில் இருந்துப் பலரும் மீண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த நோய்க்கு மருந்தாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினைப் பயன்படுத்துகின்றனர். உலகின் பல நாடுகளும் இந்த மருந்தினைப் பயன்படுத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.

இருப்பினும், இந்தியா மட்டுமே இந்த மருந்தினை உலகளவில் சுமார், 70% உற்பத்தி செய்கின்றது. தற்பொழுது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஏப்ரல் 4ம் தேதி வரை, இந்த மருந்தினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்து இருந்தது. இருப்பினும், உலக மக்களின் கஷ்டத்திற்காக தற்பொழுது அந்த தடையானது நீக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளுக்கு வியாபாரத்தின் அடிப்படையிலும், உதவியின் அடிப்படையிலும் சுமார் 55 நாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் பாராசீட்டமால் உள்ளிட்ட மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த மருந்தானது ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. அதே போல், இந்தியாவினை எப்பொழுதும் நம்பி இருக்கும் மாலத்தீவு, மால்டா போன்ற நாடுகளுக்கு உதவியின் அடிப்படையில் அனுப்பியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆப்கானிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, மியான்மர், ஜிம்பாப்பே, கென்யா, சாம்பியா, நிகார், மாலி, காங்கோ, பிரான்ஸ், நெதர்லாந்து, அர்மேனியா, கஜகஸ்தான், ஈக்குவேடார், ஜமாய்க்கா, சிரியா, உக்ரைன், ஓமன், கொலம்பியா மற்றும பஹமாஸ் உள்ளிட்டவைகளுக்கும் மருந்தினை ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது.

HOT NEWS