47 ஆப்கள் தடை! விரைவில் பப்ஜி தடை? இந்திய அரசு அதிரடி! கலக்கத்தில் சீனா!

27 July 2020 அரசியல்
pubg.jpg

ஏற்கனவே 59 சீன ஆப்களை தடை செய்துள்ள நிலையில், தற்பொழுது கூடுதலாக 47 சீன ஆப்களையும் இந்திய அரசு தடை செய்துள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு மற்றும் தகவல் திருட்டு ஆகியவைகளைக் காரணம் காட்டி, சீனாவினைச் சேர்ந்த சேர்இட், டிக்டாக், யூசிபிரௌசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. மேலும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான விதிகளை, சீனாவிற்கு கடுமையாக்கியது. இதனிடையே, இந்த தடை செய்யப்பட்ட 59 ஆப்களுக்குரிய குளோன்கள் செயலுக்கு வந்ததால், அவைகளைத் தற்பொழுது தடை செய்துள்ளது.

இதற்குரிய அரசாரணையானது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியியிட்டு உள்ளது. மேலும், தற்பொழுது 257 ஆப்கள் மீது பரிசோதனைகள் மற்றும் ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இதனால், பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுக்கள் தடை செய்யப்படும் என்றுக் கூறப்பட்டு வருகின்றது.

HOT NEWS