இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

17 November 2019 விளையாட்டு
mohammedshami.jpg

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய, மயங்க் அகர்வால் ஆட்டயநாகன் விருது பெற்றார். இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நவம்பர் 14ம் தேதி ஆரம்பித்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கினைத் தேர்வு செய்தது.

தன்னுடைய முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 158 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து, தன்னுடைய முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 493 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் வீரர் மயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்து அசத்தினார்.

தன்னுடைய இரண்டாவது இன்னிங்சினை விளையாடிய வங்கதேச அணி, 69.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 213 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வீரர்கள் இஸ்லாம் 6(24), இம்ரூல் கையீஸ் 6(13), மொமீனுல் ஹக்கீயூ 7(20), மொஹமத் மிதூன் 18(26), முஸ்பிகூர் ரஹீம் 64(150), மஹ்மதுல்லா 15 (35), லிட்டன் தாஸ் 35(39), மெஹீதி ஹசன் 38(55), தைஜூல் இஸ்லாம் 6(43), அபு ஜெயீத் 4(9) மற்றும் எபதாத் ஹூசைன் 1(3) ரன்கள் எடுத்தனர்.

HOT NEWS