மதச் சுதந்திர பட்டியல்! இந்தியா கருப்புப் பட்டியலுக்கு மாற்றம்!

01 May 2020 அரசியல்
ohm.jpg

மதச் சுதந்திரத்திற்கான பட்டியலில், இந்தியா கருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதற்கு, இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சர்வதேச மத சுதந்திர மேலாண்மை அமைப்பானது, ஒவ்வொரு நாட்டிலும் நிலவுகின்ற மத சுதந்திரம், மதப் பிரச்சனைகளைப் பற்றி ஆய்வு செய்து, அதனடிப்படையில் தற்பொழுது இந்தியாவினைக் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. மோடியின் இந்துத்துவ அரசியலும், அமித் ஷாவின் இஸ்லாமிய வெறுப்புமே, இதற்குக் காரணமாக அதன் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசியக் குடியுரிமை மக்கள் பதிவேடு உள்ளிட்ட பல திட்டங்களால், இஸ்லாமியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், இஸ்லாமியர்கள் தற்பொழுது கடும் விரக்தியில் உள்ளனர். சிஏஏ சட்டத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராடி வந்தன. கொரோனாவின் காரணமாக, இந்தப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

இதனடிப்படையில், தற்பொழுது இந்தியா கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதற்கு, இந்திய அரசாங்கம், கடும் விரக்தியினை வெளிப்படுத்தியும் உள்ளது.

HOT NEWS