சீனா கண்டுபிடிப்பதற்குள் புதிய சாலை! இந்தியா சாதனை! மிரளும் சீன இராணுவம்!

07 September 2020 அரசியல்
ladakhlatest.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருகிற நிலையில், சப்தமில்லாமல் இந்தியா புதிய சாதனையினைச் செய்துள்ளது.

தம்மா பாடம் உள்ளிட்டப் பகுதிகளை இணைத்து இந்த சாலையினை எல்லைப் பாதுகாப்பு சாலையினை அமைக்கும் பிஆர்ஓ அமைத்து உள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த ஜூன் 15ம் தேதி அன்று லடாக் பகுதியில் மோதல் வெடித்தது. அது தற்பொழுது வரை நீடித்துக் கொண்டே உள்ளது. இது தொடர்ந்து நீடிப்பதால், இரு நாட்டு இராணுவமும் தன்னுடைய இராணுவத்தினை லடாக் பகுதியில் குவித்து வருகின்றனர்.

சீனாவின் இராணுவம், இந்தியாவின் எல்லைப் பகுதிகளுக்கு வருவதற்குப் பல வசதிகளை உருவாக்கி உள்ளது. ஆனால், இந்தியாவிடம் இரண்டு சாலைகளே இருந்தன. அதனையும், பனிக் காலத்தில் பயன்படுத்த இயலாது. ஆனால், தற்பொழுது உருவாக்கியுள்ள சாலையினை அனைத்து நாட்களிலும் பயன்படுத்த இயலும். இந்த சாலையினைப் பயன்படுத்தி லே பகுதிக்கு, மனிலாவில் இருந்து சுமார் 5 மணி நேரத்திலேயே வந்துவிடலாம். ஆனால், இதற்கு முன்னாள் 12 மணி நேரம் ஆகும் என, பிஆர்ஓ தெரிவித்து உள்ளது.

HOT NEWS