ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள்! இந்தியாவில் விரைவில் இணைய உள்ளன!

09 September 2019 அரசியல்
s400missile.jpg

ரஷ்யாவிடம் இருந்து 40,000 கோடி ரூபாய் மதிப்பில், எஸ்-400 ஏவுகணைகளை வாங்க, இந்தியா திட்டமிட்டு இருந்தது.

இதற்கான ஒப்பந்தமும், கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா-ரஷ்யா இருதரப்புப் பேச்சுவார்த்தையின் பொழுது, ஒப்பந்தம் ஆனது. இதனிடையே, இந்தியாவிற்காக, எஸ்-400 ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில், ரஷ்யா தற்பொழுது ஈடுபட்டுள்ளது.

இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தி, இந்திய வான்வளிப் பகுதிகளை எளிதாக கண்காணிக்கவும், எதிரிகளின் ஏவுகணைகளை அழிக்கவும் இயலும். இதனைப் பொருட்டு, இந்தியா இந்த ஒப்பந்தத்தினை மேற்கொண்டது. இந்த ஏவுகணைகள் சீனா-இந்தியா எல்லைப் பகுதியில், பாதுகாப்பிற்காக நிலைநிறுத்தப்படும் எனத் தெரிகிறது.

இந்த ஏவுகணைகளைக் கொண்டு, தூரத்திலேயே எதிரிகளின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த இயலும் என, நம்பப்படுகிறது.

HOT NEWS