ஸ்பைஸ் 2000 குண்டுகளை வாங்கிக் குவிக்கும் இந்திய இராணுவம்!

02 July 2020 அரசியல்
spice2000.jpg

இந்திய இராணுவம் தற்பொழுது ஸ்பைஸ் 2000 ரக குண்டுகளை வாங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தற்பொழுது சீனா தன்னுடைய இராணுவத்தின் 30,000க்கும் அதிகமான வீரர்களை லடாக் பகுதியில் நிலை நிறுத்தி உள்ளது. இதனால், அசாத்தியமான சூழலானது அப்பகுதியில் நிலவுகின்றது. அவர்களை சமாளிப்பதற்காக, தற்பொழுது இந்திய இராணுவம், தன்னுடைய 10,000 இராணுவ வீரர்களை அனுப்பி உள்ளது.

இந்த சூழ்நிலையில், உலகின் முன்னணி நாடுகளுடன் ஆயுத வர்த்தகத்தில் இந்தியா ஈடுபட்டு வருகின்றது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணைகள், அமெரிக்காவிடம் இருந்து உயர்ரக ஆர்ட்டிலரி துப்பாக்கிகள், இஸ்ரேலிடம் இருந்து அதிநவீன தரை வான்வெளி பாதுகாப்பு கருவிகள், பிரான்ஸிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க அவசரம் காட்டி வருகின்றது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பால்கோட் தாக்குதலில் இந்திய விமானப்படையானது, வெற்றிகரமாக 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்று குவித்தது. அதற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்ட ஸ்பைஸ் 2000 வகைக் குண்டுகளை மீண்டும் வாங்கிக் குவிக்க, இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இந்த குண்டுகள் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும், பாதுகாப்பு பங்கர்களையும் தாக்கி அழிக்கும் சக்தி படைத்தவை.

இந்த குண்டுகளை, தற்பொழுது 500 கோடி ரூபாய் அளவிற்கு வாங்கிக் குவிக்க, இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. அதே போல் இந்திய இராணுவமானது, அமெரிக்காவிடம் இருந்து எக்ஸ்கேலிபர் ரக ஏவுகணைகளையும் பிற ஆயுதங்களையும் வாங்க முடிவு செய்துள்ளது. இதனால், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில், போர் மூளும் வாய்ப்புகள் உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

HOT NEWS