அதிகரிக்கும் மோதல்! சீன வீரர்கள் கையில் மோசமான ஆயுதங்கள்! இந்தியா எச்சரிக்கை!

11 September 2020 அரசியல்
chinesearmy.jpg

லடாக் எல்லைப் பகுதிகளில், சீன இராணுவ வீரர்கள் அத்துமீறலில் ஈடுபடுவதை, இந்திய இராணுவம் பார்த்துக் கொண்டு இருக்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து மோதல் நீடித்து வருகின்றது. இரண்டு நாடுகளும், லடாக் பகுதியில் தன்னுடையப் படைகளைக் குவித்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து இராணுவ அதிகாரிகள் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் வரை, பலரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. ஏற்கனவே, இராணுவத்தின் உயர்மட்ட அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் தங்கள் படைகளைப் பின் வாங்கிக் கொள்வதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்தன.

இந்த சூழ்நிலையில், இரு நாடுகளும் அந்த ஒப்புதலைப் பின்பற்றவே இல்லை. தொடர்ந்து சீன இராணுவம் பாங்காங் நதிப் பகுதியில் தொடர்ந்து, தன்னுடைய இராணுவத் தளவாடங்களைக் குவித்தது. அத்துடன், அங்கு பலக் கட்டுமானப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. இதனை செயற்கைக் கோள்களின் உதவியுடன் கண்டுபிடித்த இந்தியா, தற்பொழுது தன்னுடைய பீரங்கி படையின் ஒரு பிரிவினை, லடாக் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. கட்டாக் பிரிவு வீரர்கள் அங்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

சீன இராணுவம் தொடர்ந்து, தன்னுடையப் படைகளை அப்பகுதியில் குவித்து வருவதால், இந்திய இராணுவம் நேற்று ரபேல் விமானங்களை இந்திய இராணுவத்துடன் இணைத்தது. இது தற்பொழுது அம்பாலா விமானத் தளத்தில் உள்ளன. விரைவில், அவை லடாக் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த சூழ்நிலையில், இந்திய இராணுவ வீரர்கள் யாரும் கண்டுபிடிக்காத வகையில், புதிய முயற்சியினை செய்துள்ளனர்.

பிங்கர்4 எனப்படும் பகுதியில், பாங்காங் நதியின் அருகே உள்ள இடத்தினைக் கைப்பற்றி உள்ளனர். அங்கு, உயரமான மலைப் பகுதிகள் உள்ளதால், அதனை லாவகமாக இந்திய இராணுவத்தால் அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள இயலும். இங்கிருந்து கொண்டு, தரையில் இருக்கின்ற சீன இராணுவத்தினை எளிதாக தாக்க இயலும். இதனை இந்திய இராணுவம், வெற்றிகரமாக செய்துள்ளது.

HOT NEWS