3 கட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா சீனா உடன்படிக்கை! தீறுமா எல்லை பதற்றம்?

12 November 2020 அரசியல்
ladakhlatest.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் மற்றும் லே பகுதியில் நிலவி வந்த பதற்றத்தினை தடுக்கும் பொருட்டு, 3 கட்ட நடவடிக்கைக்கு இரண்டு நாடுகளும் உடன்பட்டு உள்ளன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த மே மாதம் முதல் எல்லைப் பிரச்சனை நீடித்து வருகின்றது. குறிப்பாக ஜூன் மாதம், 20 இந்திய வீரர்கள் எல்லையில் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளனர். இது பெரும் பிரச்சனையினையும், பதற்றத்தினையும் எல்லைப் பகுதியில் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு இராணுவமும், தங்களுடைய இராணுவத் துருப்புக்களை லடாக் மற்றும் லே பகுதியில் குவித்து வந்தது.

இதனால், இரு நாடுகளுக்கு இடையிலும் போர் வரும் அபாயம் ஏற்பட்டது. இதனைத் தணிக்கும் பொருட்டு, இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த திங்கட்கிழமையும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 8வது கட்டமாக நடைபெற்றப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் புதியதாக 3 கட்ட நடவடிக்கைக்கு உடன்பட்டு உள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாவதாக எல்லையில் குவிக்கப்பட்டு உள்ள, கனரக வாகனங்கள், பீரங்கிகள், பீரங்கித் துப்பாக்கிள், கவச வாகனங்கள் ஆகியவைகளைத் திரும்பப் பெற வேண்டும். 2வதாக பிங்கர்4 மலைப் பகுதியில் கூடாரம் அமைத்துள்ள இந்திய இராணுவம், 8வது பிங்கர் பகுதிக்கு நகர வேண்டும். அத்துடன் தன்னுடையப் படைகளையும் அங்கு அழைத்துக் கொள்ள வேண்டும். 3வதாக பாங்சோ ஏரிகளின் கரைகளில் உள்ள படைகளை முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும். இத்துடன், சாதாரண ரோந்து நடவடிக்கையினை இரு நாடுகளும் மேல்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இரு நாடுகளும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை.

வருகின்ற 9வது கட்டப் பேச்சுவார்த்தையில் இந்த உடன்படிக்கையில் இரு நாட்டு இராணுவமும் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS