இந்தியாவும் சீனாவும் தற்பொழுது 5 அம்சத் திட்டத்திற்கு, ஒப்புதல் அளித்துள்ளன.
ரஷ்யாவில் நேற்று நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரசாத் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது, இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையில் உள்ள எல்லைப் பிரச்சனை குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெற்று உள்ளன. சுமார், 2 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது.
இதில், இந்தியா இந்த நிலைக் குறித்துக் கவலைத் தெரிவித்து உள்ளது. சீனாவின் தாக்குதல்கள் குறித்து தன்னுடைய ஆதங்கத்தினை வெளியிட்டு உள்ளது. இத்துடன், இந்தியா அமைதியினை விரும்புவதாகவும் கூறப்பட்டு உள்ளது. இது குறித்துப் பேசியுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர், சீனா தொடர்ந்து அமைதியானப் போக்கினை விரும்புவதாகவும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும் எனவும் கூறியுள்ளார். இந்தியா அங்கிருந்து பின் வாங்கப்போவது கிடையாது எனவும், இருப்பினும், இரு நாடுகளும் அரசாங்க ரீதியிலும், இராணுவ ரீதியிலும் தொடர்ந்து இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றுக் கூறியுள்ளார்.
இரு நாட்டு அமைச்சர்களும், 5 அம்ச திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அதன்படி, ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆயுதங்கள் பயன்படுத்துவதைக் கைவிடுவது, துப்பாக்கிச்சூடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, ஒப்பந்தத்தினை மீறாமல் பார்த்துக் கொள்ளவும், முடிந்த வரை விரைவில் இந்தப் பதற்றத்தினை முடிவிற்கு கொண்டு வருவது எனவும், படைகளை பின் வாங்கிக் கொள்வது எனவும், இராணுவத் துருப்புகளை எல்லைப் பகுதியில் இருந்து வெளியேற்றுவது எனவும் கூறப்பட்டு உள்ளது.
இத்தகைய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதால், எல்லைப் பகுதியில் பதற்றம் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.