இந்தியா சீனா பேச்சுவார்த்தையில் இழுபறி! தொடரும் பதற்றம்!

08 June 2020 அரசியல்
chinesearmy.jpg

இந்தியா தற்பொழுது தன்னுடைய விமானப்படையின் பெரிய விமானங்களை லடாக் பகுதியில் உள்ள எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தி உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லைப் பிரச்சனை நீடித்து வருகின்றது. லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் ஏரி பகுதியில், சீன வீரர்கள் தங்களுடையப் படகில் வேகமாகச் சென்றனர். மேலும், தங்களுடைய ஹெலிகாப்டர் மூலமும், பறந்தனர். இது இரண்டு நாட்டு இராணுவத்திற்கும் இடையில் மோதலை உருவாக்கியது.

மேலும், இந்தியா சீனாவிற்கு இடையில் சுமார் 3200 கிலோமீட்டர் சர்வதேச இடைவெளி உள்ளது. அதில், அத்துமீறி சீன வீரர்கள் உள்ளே வந்தனர். தங்களுடைய 5,000க்கும் மேற்பட்ட வீரர்களை இந்தியாவிற்கு எதிராக, சீன எல்லையில் நிறுத்தியது சீனா. மேலும், ஜே16 மற்றும் ஜே17 என்ற போர்விமானங்களை சீனா இராணுவம் நிறுத்தியது. அதுமட்டுமின்றி, அந்த விமானங்களுக்குத் தேவையான எரிபொருளையும் அங்கு கொண்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவும் தன்னுடைய இராணுவத்தினை அங்கு குவிக்க ஆரம்பித்தது. இதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டது. இதனை ஐநாவும் கவனித்து வந்தது. இந்த சம்பவம், வருத்தமளிப்பதாக தெரிவித்தது. இந்த சூழ்நிலையில், இரண்டு நாட்டு இராணுவத்தின் உயரதிகாரிகளும் உயர்மட்ட அளவில் அமர்ந்து பேசி தீர்க்க முடிவு செய்தனர்.

தொடர்ந்து, 13 முறை பேச்சுவார்த்தை நடந்த போதிலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், ஜூன் 6ம் தேதி அன்று இரண்டு நாட்டு இராணுவ ஜெனரல்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சீனாவின் படையானது குறைக்கப்படும் எனவும், 2000 கிலோமீட்டர் பின்வாங்குவதாகவும் சீனாக் கூறியதாக தெரிகின்றது. அதனை இந்தியாவும் வரவேற்று உள்ளது.

ஆனால், சீனாவோ தொடுர்ந்து, நேபாளம் வழியாக லடாக் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் இராணுவ கட்டுமானங்களை நிறுத்த வேண்டும் என்றக் கோரிக்கையை இந்தியா மறுத்து வருகின்றது. இந்நிலையில், தற்பொழுது இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள், பதற்றம் நிலவும் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

HOT NEWS