லடாக் இந்தியா உருவாக்கியது! சீனா புதிய குற்றச்சாட்டு! படைகளை விலக்க ஒப்புதல்!

14 October 2020 அரசியல்
chinaindialadakh.jpg

லடாக்கில் இரு நாட்டு இராணுவமும் தங்களுடையப் படைகளை, பின் வாங்கிக் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்து உள்ளன.

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் பகுதியில் மோதல் நிலவுவதற்கான பதற்றம் நிலவி வருகின்றது. இரு நாட்டு இராணுவமும் தங்களுடையப் படைகளை, குவித்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையில், இரு நாட்டு இராணுவ உயரதிகாரிகளும், அமைதிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், எவ்வித முடிவும் ஏற்படவில்லை.

இந்த சூழ்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி, இரு நாட்டு இராணுவமும் தங்களுடையப் படைகளைப் பின் வாங்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு இராணுவமும், எவ்வித சர்ச்சையும் ஏற்படாத வகையில், தங்களுடையப் படைகள் திரும்பப் பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் லடாக் பகுதியில் அமைதி நிலவ இரு நாடுகளும் ஒப்புக் கொண்டு உள்ளன. இந்த சூழ்நிலையில், சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்டப் பகுதிகளை இந்தியா தான், சட்ட விரோதமாக உருவாக்கி உள்ளது. இதனை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்டு உள்ள பதற்றத்திற்கு முழுக்க முழுக்க இந்தியா தான் காரணம் என்றுக் கூறியுள்ளார். இந்தியா தான் தொடர்ந்து, அப்பகுதியில் தங்களுடைய இராணுவத்தினைக் குவித்து வருகின்றது.

மேலும் பேசிய அவர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்துள்ள 69 பாலங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்தப் பாலங்கள் அனைத்தும், லடாக் பகுதிக்கு இராணுவத் துருப்புக்களை மிகக் குறைந்த நேரத்தில், அழைத்துச் செல்ல உதவும் என்பதால், சீனா தற்பொழுது அதனை எதிர்த்து வருகின்றது.

HOT NEWS