இந்தியாவினை தொட்டால் சீனா அவ்வளவு தான்! இவைகள் தான் காரணம்!

08 June 2020 அரசியல்
modixijingping.jpg

இந்தியாவுடன் சீனாவினால் அவ்வளவு எளிதில் மோதிவிட முடியாது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. சில வாரங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், எல்லைப் பகுதியில் இரண்டு நாடுகளும் மோதல், பேச்சுவார்த்தை ஆகியவைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மிக மோசமானப் போருக்கு தயாராகுங்கள் என, சீன அதிபர் பேசியுள்ளார். இந்தியாவுடன் சீனா மோதுவது அவ்வளவு எளிதான விஷயமே அல்ல.

பொருளாதாரம்

சீனாவின் பொருளாதாரமே, இந்தியாவின் சந்தையை நம்பித் தான் உள்ளது. இந்தியாவில் விற்கப்படுகின்ற பொருட்களில் 95% சீனாவினை மையமாகக் கொண்டு உருவாகின்றன. சீனாவின் பொருட்களை இந்தியா தடை செய்தால், சீனாவின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடும். ஆதலால், போருக்கு சீனா வருவதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே உள்ளன.

இந்திய இராணுவம்

எந்த அளவிற்கு சீனாவின் இராணுவம் முன்னேற்றம் அடைந்துள்ளதோ, அதே போல இந்திய இராணுவமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. சீனாவால் உலகின் எந்த மூலையில் உள்ள இடத்தினையும் தாக்கி அழிக்க முடியும். ஆனால், அது இந்தியாவினால் முடியாது. அதே சமயம், இந்தியா நினைத்தால் கண்டிப்பாக சீனாவின் எந்தப் பகுதியினையும் தாக்கி அழிக்க முடியும். இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்துள்ளன.

நட்பு நாடுகள்

சீனாவிற்கு உதவியாக ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்தியாவிற்கு அப்படியல்ல. இந்தியாவிற்காக அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரேசில், இலங்கை உள்ளிட்ட நாடுகள் கண்டிப்பாக உதவிக்காக வந்து நிற்கும். இவைகளை எல்லாம், சீனாவினால் கண்டிப்பாக சமாளிக்க முடியாது.

அமெரிக்கா இந்தியா நட்பு

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நல்ல உறவு நிலை நீடித்து வருகின்றது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், இந்தியப் பிரதமர் மோடியும் மிகவும் நல்ல நெருக்கமான நட்புறவினைக் கொண்டுள்ளனர். இது சீனாவிற்கு பிரச்சனையாகவே இருக்கின்றது. சீனாவிற்கு, முடிவுகட்ட அமெரிக்கா கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் வந்தால், கண்டிப்பாக இதனைப் பயன்படுத்தி, சீனாவினைப் பழிவாங்க இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா. என்ன தான் சீன வலிமையான நாடாக இருந்தாலும், அமெரிக்கா முன்னிலையில் கொசு தான்.

கொரோனா வைரஸ்

தற்பொழுது உலகம் முழுவதும் பரவி இருக்கின்ற கொரோனா வைரஸானது, சீனாவில் இருந்து தான் பரவி உள்ளது. இதனால், உலக நாடுகள் பலவும் தங்களுடைய நாட்டு மக்களை இழந்து உள்ளனர். அனைத்து நாட்டின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சீனாவிடம் நஷ்டஈடு கேட்டு வருகின்றனர். இந்நிலையில், போர் என்றால் கண்டிப்பாக சீனாவினைப் பழிவாங்குவதற்கு இந்தியாவிற்கே அனைத்து நாடுகளும் உதவி செய்யும் என்பது சீனாவிற்கு நன்றாகவேத் தெரியும்.

HOT NEWS