துரூவஸ்த்ரா ஏவுகணை சோதனை! போருக்குத் தயாராகின்றதா இந்தியா?

24 July 2020 அரசியல்
dhruvastra.jpg

லடாக் எல்லையில், 40000 சீன வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்திய இராணுவம் தற்பொழுது துரூவஸ்த்ரா ஏவுகணையைச் சோதனை செய்துள்ளது.

ஓடிசாவின் சண்டிபூர் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட சோதனைப் பகுதியில், இந்தியாவின் டிஆர்டிஓ புதிய சோதனை ஒன்றினை, கடந்த ஜூலை 15 மற்றும் ஜூலை 16ம் தேதி அன்று செய்தது. விமானத்தின் மூலம் ஏவப்பட்ட ஏவுகணையானது, சரியான இலக்கினை தாக்கி அழிக்கின்றதா என, இருமுறை சோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணைக்கு துரூவஸ்த்ரா எனப் பெயர் வைத்துள்ளது. மேலும், இந்த ஏவுகணையினைப் பயன்படுத்தி, எதிரிகளின் டாங்கிகளை எளிதாக அழிக்க இயலும். இந்த ஏவுகணையானது, முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணையினை விமானத்தில் இருந்தும், ஹெலிகாப்டரில் இருந்தும் ஏவும் வகையில் தயாரித்து வருகின்றனர்.

ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படும் இத்தகைய ஏவுகணைகளுக்கு, நாக் ஹெலினா எனப் பெயர் சூட்டியுள்ளனர். இது ஏற்கனவே, கடந்த ஆண்டு மூன்று முறை சோதிக்கப்பட்டு பின் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்பொழுது துரூவஸ்த்ரா ஏவுகணையின் மூன்றாம் கட்ட சோதனை விரைவில் நடத்தப்பட உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS