வடகொரியாவிற்கு மருந்து ஏற்றுமதி! இந்தியா தாராளம்!

27 July 2020 அரசியல்
medicine.jpg

வடகொரியாவில் கடும் மருந்துத் தட்டுப்பாடு நிலவி வருவதால், இந்தியா ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு மருந்து ஏற்றுமதி செய்ய உள்ளதாக, தகவல்கள் பரவி உள்ளன.

வடகொரியாவின் மீது, பலப் பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அரசு விதித்து உள்ளது. இதனால், அந்நாட்டினருக்கு யாரும் பெரிய அளவில் உதவி செய்வது கிடையாது. அமெரிக்காவிற்குப் பயந்தும், பொருளாதார உறவு நிலைக் காரணமாகவும் யாரும் வடகொரியாவிற்கு ஆதரவளிப்பதில்லை. ஆனால், ரஷ்யாவும், சீனாவுமே வடகொரியாவின் ஆதாரமாக உள்ளன.

வடகொரியாவில் மருத்துவ வசதிக்கும், மருந்துகளுக்கும் பெருமளவில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அந்நாட்டில் தற்பொழுது கொரோனா வைரஸ் வேறு பரவ ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், அந்நாட்டு அரசு இந்தியாவிடம் மருந்து வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. அதனையொட்டி, தற்பொழுது ஒரு மில்லியன் அளவிற்கு, காசநோய்க்கான மருந்தினை இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளது.

இது குறித்து இந்திய தரப்பில் தெரிவிக்கையில், வடகொரிய நாடானது தற்பொழுது மருந்துப் பொருட்கள் குறைப்பாட்டால் கஷ்டப்படுவதாகவும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் இந்த உதவியினை இந்திய அரசு செய்வதாகவும் கூறியுள்ளது.

HOT NEWS