10 இடம் பின்நோக்கிச் சென்ற இந்தியா! ஜனநாயக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு குறைந்தது!

23 January 2020 அரசியல்
ratinggraph.jpg

ஜனநாயக நாடுகளின் பட்டியில், இந்தியா தற்பொழுது 10 இடங்கள் பின்நோக்கிச் சென்றுள்ளது.

2019ம் ஆண்டிற்கான, சர்வதேச ஜனநாயக நாட்டிற்கான தரப்பட்டியலை எகானமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட், நியூஸ் அண்ட் ஜென்ரல் அப்பேர்ஸ் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஜனநாயக நாடுகளின் தரவரிசையினை இந்த அமைப்பு வெளியிட்டு வருகின்றது. அதன் படி, கடந்த 2019ம் ஆண்டிற்கானப் பட்டியலையும் அந்த அமைப்பு வெளியிட்டது. அதில், 6.9 மதிப்பெண்களைப் பெற்று, இந்திய நாடு 165 நாடுகள் கொண்டப் பட்டியலில் 51வது இடத்தினைப் பிடித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டியல் 41வது இடத்தில் இந்தியா இருந்தது.

இந்தியாவில் தற்பொழுது நிலவி வரும் சூழல், சிஏஏ சட்டத்திருத்தம், என்ஆர்சி சட்டமுறை, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளின் காரணமாக, இந்தியாவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் அமைதியானது குறைந்துள்ளதாகவும், அதன் காரணமாக, அதன் தரமானது 10க்கு 6.7 என்ற அளவில் உள்ளது எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 108வது இடத்திலும், சீனா 153வது இடத்திலும் உள்ளன. நார்வே முதல் இடத்திலும், ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகள் முறையே, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

HOT NEWS