52 சீன ஆப்கள் ஆபத்தானவை! தடை செய்ய உளவுத்துறை பரிந்துரை!

19 June 2020 அரசியல்
tiktok.jpg

இந்தியாவில் பயன்படுத்தப்படும் 52 சீன ஆண்ட்ராய்டு ஆப்கள் மிகவும் ஆபத்தானவை எனவும், அதனைத் தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசிற்கு இந்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது போர் பதற்றம் நிலவி வருகின்றது. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது சீன இராணுவத்தின் தாக்குதல். இந்திய இராணுவ வீரர்கள் மீது, சீன இராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதனால், இந்தியாவில் உள்ள பொதுமக்கள் சீனப் பொருட்களை வாங்கமாட்டோம் எனவும், அப்பொருட்களுக்கு எதிர்ப்போம் எனவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சீனாவின் டிக்டாக் உள்ளிட்டவைகளை நீக்க ஆரம்பித்துவிட்டனர். இதனிடையே, இந்திய உளவுத் துறையானது, மத்திய அரசிற்கு அறிக்கை ஒன்றினை வழங்கி உள்ளது.

அதில், சீனாவினைச் சேர்ந்த பல ஆண்ட்ராய்டு செயலிகள் மிகவும் ஆபத்தானவை எனவும், பயனர்களின் தகவல்களைத் திருடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளது. யூசி ப்ரௌசர், ஜூம் செயலி, டிக் டாக், க்ளீன் மாஸ்டர், செண்டர், ஷேர் இட் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, சீன ஸ்மார்ட்போன்களைத் தவிர்ப்போம் எனவும், இந்தியப் பொருட்களுக்கு இனி முக்கியத்துவம் அளிப்போம் எனவும் இந்தியப் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

HOT NEWS