உலகிலேயே இந்தியாவில் தான் அதிக வரி!

07 May 2020 அரசியல்
petrolbunk.jpg

உலகிலேயே இந்தியாவின் தான், பெட்ரோல், டீசல் முதலான எரிபொருள் மீதான வரி அதிகமாக உள்ளது.

இந்தியாவில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. வருகின்ற மே-17ம் தேதி வரை, இந்த ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் பொது ஊரடங்கினைத் தங்களுடைய நாடுகளில் அமல்படுத்தி உள்ளனர்.

இதனால், பொதுப் போக்குவரத்தும் தடைபட்டு உள்ளது. இதன் காரணமாக, எரிபொருள் அதிகளவில் தேங்கி உள்ளது. இதனை முன்னிட்டு, எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள், எரிபொருள் உற்பத்தியினை, இந்த மே மாதம் முதல் குறைக்க, திட்டமிட்டு உள்ளனர். அமெரிக்காவில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலையானது, 35 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

அந்த அளவிற்கு, இந்த எரிபொருள் விலையானது கடுமையாகக் குறைந்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் மட்டும் இந்த சூழ்நிலையானது, முற்றிலும் மாறுபட்டு உள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது, 71.26 ரூபாய்க்கும், டீசலானது 66.78 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்பொழுது புதிய வரியினை மத்திய அரசு விதித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் மீது 18 ரூபாயும், டீசல் மீது 12 ரூபாயும் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரியானது, பொதுமக்களுக்குக் கிடையாது எனவும், பெட்ரோல், டீசலினை விற்கும் நிறுவனங்களுக்கு எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளர். கிட்டத்தட்ட 60% அதிகமாகவே, இந்தியாவில் எரிபொருள் மீது வரி விதிக்கப்படுகின்றது.

ஆனால், மற்ற நாடுகளில் இவ்வாறு விதிக்கப்படுவது கிடையாது. அந்த அளவிற்கு, இந்த வரியானது அதிகமாகவே உள்ளது.

HOT NEWS