உணவு இருப்பு தாராளமாக உள்ளது! யாரும் கவலைப்பட வேண்டாம்!

27 April 2020 அரசியல்
ricestock.jpg

தற்பொழுது கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தினால், மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு நீடித்தால், உணவுப் பஞ்சம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக, பலரும் தங்களுடையக் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இதனிடையே, இந்தியாவிடம் அதிகளவில் உணவுப் பொருட்கள் உள்ளதாகவும், அவைகள் வீணாகின்றன எனவம் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், இந்திய உணவுக் கழகத் தலைவர் டிவி.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உணவு தானியக் கையிருப்பு திட்டமிடப்பட்டு உள்ளது. மார்ச் 2021 வரைக்கும் தேவையான, உணவுப் பொருட்கள் பாதுகாப்பாக உள்ளன.

284 லட்சம் டன் அரிசி மற்றும் 280 லட்சம் டன் கோதுமை ஆகியவை நம்மிடம் கையிருப்பில் உள்ளன. எனவே, தேவைக்கு அதிகமாக உள்ளது எனக் கூறுவது தவறு. அதே போல் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்றுக் கூறுவதும் தவறு என்று, அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

HOT NEWS