தொழில் துவங்க சாதகமான நாடுகளின் பட்டியலில், இந்தியா முன்னேறி உள்ளது.
உலக அளவில் மொத்தம் உள்ள 190 நாடுகளில், 77வது இடத்தில் இந்தியா இருந்து வந்தது. தொடர்ந்து கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட, தொழில் முனைவோர்களின் வளர்ச்சி, வெளிநாட்டு நிறுவனங்களின் ஆர்வம் காரணமாக, இந்தியாவில் முதலீடு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து, பிரதமர் மோடி செய்யும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்து தொழில் செய்ய விரும்புகின்றனர்.
உலகளவில் 14 இடங்களில் முன்னேறி, தற்பொழுது 77வது இடத்தில் இருந்து 63வது இடத்தில் உள்ளதாக, நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து டிவீட் செய்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தற்பொழுது இந்தியாவில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவை மிக சுலபமாகி உள்ளன. இதன் காரணமாக, பொருளாதார வர்த்தகத்தில் இந்தியா 68வது இடத்தினையும் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.