டெஸ்ட் சாம்பியன் ஷிப்பில் தொடர்ந்து முதலிடம்! கோலி அணி சாதனை!

26 November 2019 விளையாட்டு
indvssa3rdtest.jpg

கடந்த ஆஷஸ் தொடருடன் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி, அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு வருடம் நடக்கும் போட்டிகளில், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு, இந்த டெஸ்ட் சாம்பியன் ஷிப்பிற்கான கோப்பை வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்திய அணி உட்பட மொத்தம் பத்து அணிகள் முதலிடம் பிடிப்பதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இந்தத் தர வரிசைப் பட்டியலை உருவாக்கியதில் இருந்தே, இந்திய அணித் தொடர்ந்து, முதலிடத்தில் உள்ளது.

தற்பொழுது, வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து, புள்ளிப் பட்டியலில் 360 புள்ளிகளுடன் அசைக்க முடியாத உயரத்தில் உள்ளது.

மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது இந்திய அணி. இந்திய அணியினைத் தொடர்ந்து, இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணி உள்ளது. அந்த அணி, 6 போட்டிகளில் விளையாடி, 2 தோல்வி, ஒரு டிரா மற்றும் மூன்று வெற்றி என மொத்தம் 116 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து அணியானது உள்ளது. அந்த அணி, 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி என 60 புள்ளிகளுடன் உள்ளது.

தொடர்ந்து, ஏழு போட்டிகளிலும், கோலித் தலைமையிலான இந்திய அணி, வெற்றிகளைக் குவித்து வருவதால், இந்த முறை டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பை இந்திய அணிக்கே கிடைக்கும் என, இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

HOT NEWS