ஜப்பான் இந்தியா கடற்படை கூட்டு ஒத்திகை!

30 June 2020 அரசியல்
shipcannon.jpg

இந்திய மற்றும் ஜப்பானிய கடற்படைகள் கூட்டு ஒத்திகையில் ஈடுபட உள்ளன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், இந்திய கடற்படையும், ஜப்பானிய கடற்படையும் தற்பொழுது கூட்டுக் கடற்படைப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக, தேசிய மெரிடைம் பவுண்டேசன் துணை அட்மிரல், பிரதீப் சவ்ஹான் கூறுகையில், இது போர்ப்படை ஒத்திகை இல்லை எனவும், இது வெறும் சிக்னல்களைப் பரிமாறிக் கொள்ளும் பயிற்சியே எனவும் கூறியுள்ளார்.

இந்தியாவின் சார்பில், ஐஎன்எஸ் ரானா மற்றும் ஐஎன்எஸ் குளூஸ் உள்ளிட்ட கப்பல்கள் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட உள்ளன. அதே போல், ஜப்பான் சார்பில் ஜேஎஸ் காஷிமா மற்றும் ஜேஎஸ் சிமாயுகி உள்ளிட்ட கப்பல்கள் ஈடுபட உள்ளன. இந்த மூன்று ஆண்டுகளில் 15 கடற்படைப் பயிற்சிகளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

HOT NEWS