இந்தியா தரப்பில் 20 பேர் வீரமரணம்! சீனா தரப்பில் 43 பேர் வீரமரணம்! தொடரும் பதற்றம்!

16 June 2020 அரசியல்
indiansoldiers.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் இந்தியா தரப்பில் 20 பேரும், சீனா தரப்பில் 43 பேரும் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த மே மாதம் 5ம் தேதி அன்று லடாக் பகுதியில் மோதல் ஏற்பட்டது. இரண்டு நாட்டு வீரர்களும் கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 250 பேர் காயமடைந்தனர். பத்துக்கும் மேற்பட்ட முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரண்டு நாட்டு வீரர்களும் அமைதி அடைந்தனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி மற்றும் 16ம் தேதி அன்று இரண்டு நாட்டு வீரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. இதில், அங்கு இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதலில் இந்தியாவின் சார்பில் 20 பேர் பலியாகி உள்ளனர். இதனை இந்திய இராணுவம் ஏற்றுக் கொண்டது. அங்கு நிலவுகின்ற மோசமான வானிலை மற்றும் பூஜ்ஜியம் டிகிரிக்கும் கீழான வெப்பநிலைக் காரணமாக, பலியாகி உள்ளனர். இதனை, இந்திய இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதே போல், சீனாவின் தரப்பில் 43 பேர் பலியும், படுகாயமும் அடைந்து இருப்பதாக சீன இராணுவம் தெரிவித்து உள்ளது. இருப்பினும், எத்தனை பேர் பலியாகி இருக்கின்றனர் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டது. இது குறித்துப் பேசிய, சீன வெளியுறவுத்துறை, இந்திய இராணுவம் அத்துமீறி எல்லைக் கடந்து வந்ததால் இப்படியானத் தாக்குதல் நடைபெற்று உள்ளது.

இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றுக் கூறியுள்ளார். இரண்டு நாட்டிலும் உள்ள தூதரகங்களுக்கும், இரண்டு நாட்டு அரசாங்கமும் பலத்தப் பாதுகாப்பினை வழங்கி வருகின்றன. இந்த சம்பவத்தால், இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த சம்பவம், கவலை அளிப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. அதே போல், நாங்கள் இந்த விஷயத்தினை உண்ணிப்பாக கவனித்து வருகின்றோம் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

HOT NEWS