ஆகஸ்டிற்கு முன் சர்வதேச விமான சேவை! மத்திய அமைச்சர் பதில்!

24 May 2020 அரசியல்
indianairport.jpg

வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாகவே, சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்படும் என, மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக உலகம் முழுக்க பல நாடுகள், ஊரடங்கு அறிவிப்பனை அறிவித்துள்ளன. சர்வதேச விமான சேவையும் முடக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், வருகின்ற மே-25ம் தேதி முதல் இந்தியாவிற்குள் உள்நாட்டு விமான சேவைக்கு, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவிற்குள் மட்டும் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு மே முடியும் வரை, விமான சேவை வேண்டாம் என தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

அவர் ஆன்லைன் மூலம் செய்தியாளர்களுடன் உரையாடினார். அவர் பேசுகையில், விமானப் பயணிகள் ஆரோக்கிய சேது ஆப்பினைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் கட்டாயம் இல்லை. அவர்கள் விருப்பம் இருந்தால், பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் தேவையில்லை. வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாகவே, சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS