பாரத் என்றப் பெயர் புழக்கத்தில் தான் உள்ளது! இந்தியா பெயர் வழக்கு!

04 June 2020 அரசியல்
supremecout.jpg

இந்தியா என்றப் பெயருக்குப் பதிலாக, பாரத் என்றப் பெயரையே நாம் பயன்படுத்த வேண்டும் என்ற வழக்கினை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு இந்த வழக்கு வந்தது. இந்த மனுவினை அரசாங்கத்தின் பிரதிபிம்பமாக பார்ப்பதாக உச்சநீதிமன்றம் கூறியது. இந்த வழக்கினை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் ஏஎஸ் போபன்னா, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள், எதற்காக இங்கு வந்தீர்கள். ஏற்கனவே, நம்முடைய நாட்டில் பாரத் என்று தானே கூறுகின்றோம் என்றனர்.

அதற்கு டெல்லியினைச் சேர்ந்த மனுதாரரின் சார்பாக, அஸ்வின் வைஸ் என்ற வழக்கறிஞர் பதிலளித்தார். அவர் பேசுகையில், இந்தியா என்பது நம் நாட்டினைச் சேர்ந்த வார்த்தை அல்ல எனவும், இண்டிகா என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து உருவாக்கப்பட்டது எனவும் கூறினார். மேலும், அவர் உரையாடுகையில், இந்தியா என்ற ஆங்கில வார்த்தையானது, நம்முடைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கூறுவதாக இல்லை என்றுக் கூறினார். இந்தியாவினை ஏற்கனவே நாம் பாரத் என்றே அழைத்துள்ளோம்.

பாரத் மாத கீ ஜே என்பது போன்ற வசனங்களை நாம் பயன்படுத்தி வருகின்றோம். ஆகவே, நாம் பாரத் என்ற பெயரையே இந்தியாவிற்கு சூட்ட வேண்டும் என்றுக் கூறினார். அதற்குப் பதிலளித்த நீதிமன்றம், ஆர்டிகல் ஒன்றின் படி, இந்தியாவில் ஏற்கனவே பாரத் என்றப் பெயர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். பெயர் மாற்றம் தேவையில்லை எனத் தீர்ப்பளித்தது.

HOT NEWS