ஏன் ஆர்சிஈபி ஒப்பந்தத்தில் இந்தியாவினை மோடி இணைக்கவில்லை தெரியுமா?

08 November 2019 அரசியல்
modimamata.jpg

கடந்த நவம்பர் 3ம் தேதி அன்று, தாய்லாந்து சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற ஆர்சிஈபி கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில், இந்திய நாட்டினை இணைத்துக் கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தகவல்கள் வெளியாகின.

ஆனால், அத்தகையத் தகவல்களை பொய்யாக்கும் வண்ணம், ஒப்பந்தத்தில் இந்தியாவினை இணைக்க மோடி மறுத்துவிட்டார். இந்த ஆர்சிஈபி என்பது ஆசிய நாடுகளுக்கான ஒரு அமைப்பு என்று கூறலாம். இதில், ஆசியாவின் இந்தோனேஷியா, கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, மியான்மர், லாவோஸ், வியட்நாம் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில், உள்ள நாடுகளுக்களு இறக்குமதி செய்து கொண்டால் குறைந்த இறக்குமதி வரியே விதிக்கப்படும் அல்லது விதிக்கப்படாது. இதனால், எவ்விதத் தடையும் இல்லாத வர்த்தகம் நடைபெறுகின்றது.

இதில், இந்தியா இணைந்து கொண்டால், இந்தியாவிற்கும் பல நாடுகள் தங்களுடைய பொருட்களை ஏற்றுமதி செய்வர். அவர்களுடையத் தொழிலும், வர்த்தகமும் சிறப்படையும். ஆனால், இந்தியாவில் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையால், பெரிய அளவில் ஏற்றுமதியானது நடைபெற வாய்ப்பில்லை. எனவே, இதற்கு மோடி அனுமதி வழங்கப்பட வில்லை என, அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகின்றது.

HOT NEWS