பாகிஸ்தான்-இந்தியா போர் என்றால் பல கோடி பேர் இறப்பர்! ஜெர்மனி அதிர்ச்சி தகவல்!

19 February 2020 அரசியல்
indianflag.jpg

பாகிஸ்தானிற்கும், இந்தியாவிற்கும் போர் வந்தால், கண்டிப்பாக பண்ணிரண்டரை கோடி மக்கள் உயிரிழப்பர் என, ஜெர்மனியின் தி முனீச் பாதுகாப்பு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையில் போர் பதற்றம் தொடர்ந்து நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது. சென்ற ஆண்டு புல்வாமா தாக்குதலில் இருந்து, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட விஷயங்களால், இரண்டு நாடுகளுக்கும் இடையில், சரியான உறவுநிலை இல்லை.

இரண்டு நாடுகளுக்கு இடையிலும், பாதுகாப்பு அத்துமீறல்கள் ஏற்படுவதாக, இரண்டு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். அதில், பாகிஸ்தான் இராணுவம், அதிக முறை எல்லைத் தாண்டிய பயங்கரவாத்தில் மட்டுமல்லாமல், எல்லையைத் தாண்டி வந்து துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு உடனடியாக, இந்திய இராணுவமும் தக்கப் பதிலடி கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும், தன்னுடைய பாதுகாப்பு அறிக்கையினை ஜெர்மனி நாடு வெளியிட்டு வருகின்றது. அதன்படி, தற்பொழுது தன்னுடைய 2020ம் ஆண்டுக்கான அறிக்கையினையும் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா-பாகிஸ்தான் குறித்தத் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையில், அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், அதன் விளைவு மிக மோசமாக இருக்கும் எனவும், இந்தப் போரில், 5 முதல் 121/2 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாகவும், போர் சமயத்தில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் டன் வரையிலான, அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன எனவும் கணித்துள்ளது.

இந்த போரில், அதிகளவில் கார்பன் வெளிப்படும் என்பதால், சூரிய ஒளி குறைவாகவே கிடைக்கும் எனவும், பொருளாதாரம், விவசாயம் முதலியவை கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் கணித்துள்ளது.

Source: securityconference.org/assets/user_upload/MunichSecurityReport2020.pdf

HOT NEWS