ரஷ்யாவிடம் இருந்து 33 விமானங்களை வாங்கும் இந்தியா!

02 July 2020 அரசியல்
mig29.jpg

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழ்நிலைக் காரணமாக, தற்பொழுது ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்களை வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி இரவு, இந்திய வீரர்கள் சீன வீரர்கள் அத்துமீறி கற்கள் மற்றும் கனமான ஆயுதங்களால் தாக்கினர். இதில், 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். இந்த பிரச்சனையால், இரு நாட்டு எல்லையிலும், இராணுவத் துருப்புக்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா தற்பொழுது ஆயுதங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

ரஷ்யாவிடம் இருந்து, ஏற்கனவே எஸ்400 ஏவுகணைகளை வாங்க ஒப்புதல் செய்திருந்தது. இந்த சூழ்நிலையில், புதிதாக 33 போர் விமானங்களை வாங்கவும் முடிவு செய்துள்ளது. சுகோய் எஸ்யு30 எம்கேஐ ரக விமானங்கள் சுமார் 12ம், அதே போல் மிக் 29 ரக விமானங்கள் 21ம் வாங்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக 18,148 கோடி ரூபாயானது ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இந்தியாவிடம் பயன்பாட்டில் உள்ள மிக்29 ரக விமானங்களை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது. இதனிடையே, இன்று ரஷ்ய அதிபர் புடினிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. வருகின்ற 2036ம் தேதி வரை, அதிபராக இருக்க நடைபெற்ற தேர்தலில் புதின் வெற்றி பெற்றதால், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவர் இந்தியாவிற்கு வருகைத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

HOT NEWS