இந்தியாவில் 4 இடங்களில் கொரோன மருந்து முன்னோட்டம்! கோவாக்சின் சாதனை!

26 December 2020 அரசியல்
covaxin.jpg

இரண்டு கட்ட ஆய்வுகளிலும் கோவாக்ஸின் மருந்து சிறப்பாக செயல்படுவதால், 3வது கட்ட சோதனைக்கு 4 மாநிலங்களை இந்திய அரசு தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, சுமார் ஒரு கோடியினை கடந்து உள்ளது. இதனால், விரைவில் இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், இந்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. உலக நாடுகள் பலவும், அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்தத் தொடங்கி உள்ளன.

இதன் காரணமாக, இந்திய அரசு எந்த மருந்தினைப் பயன்படுத்தும் எனப் பலரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் முதல் இந்தியாவில் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மூன்று கொரோனா தடுப்பூசிகளைத் தயாரித்து, சோதனை செய்து வருகின்றனர். இதில் கோவாக்ஸின் என்ற மருந்தானது, தற்பொழுது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளது.

இந்த மருந்தினை, இரண்டு கட்டமாக பரிசோதனை செய்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. நோயாளிகளிடம் நல்ல எதிர்ப்பு சக்தியும், நோய் கட்டுப்படுத்தும் தன்மையும் அதிகரித்துள்ளது. இதனால், இந்த மருந்தின் மூன்றாவது கட்டப் பரிசோதனைக்காக ஆந்திரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலங்களினை ஐசிஎம்ஆர் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த மாநிலங்களில், கோவாக்ஸின் மருந்தின் 3வது கட்டப் பரிசோதனையானது நடைபெற உள்ளது.

மொத்தம் 22 இடங்களில் இந்த மருந்தின் மீதான பரிசோதனையானது, பெரிய அளவில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஐசிஎம்ஆர். இவர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டப் பின்பு, இந்த மருந்தானது வெற்றிப் பெற்றதா, பொதுமக்களிடம் பயன்படுத்த அனுமதிக்கப்படுமா என, கூறப்படும். இது வெற்றிப் பெறும் பட்சத்தில், ஜனவரி மாத இறுதியில் இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

HOT NEWS