இந்தியாவில் ரேபிட் கிட் தயாரிக்க மத்திய அரசு முடிவு!

22 April 2020 அரசியல்
rapidtestkit12.jpg

சீனாவில் இருந்து வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள், தவறான முடிவினைக் காண்பித்தக் காரணத்தால், இந்தியாவிலேயே ரேபிட் டெஸ்ட் கருவிகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சீனாவில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புடைய ரேபிட் டெஸ்ட் கருவிகளை, இந்திய அரசாங்கம் இறக்குமதி செய்தது. அவைகள் அனைத்தும், மாநில வாரியாகப் பிரித்து அனுப்பப்பட்டன. இதனால், அனைத்து மாநிலங்களும், இந்த கருவியானது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி, கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்றதா என்ற சோதனையும் மேற்கொள்ளப்பட்டன.

அதில், பல மாநிலங்களில் சரியான முடிவுகள் வரவில்லை. முன்னுக்குப் பின் முரணான முடிவுகளே வெளியாகின. இதனால், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என்றுக் கூறியுள்ளது. மேலும், இந்தக் கருவிகளை மீண்டும் சீனாவிற்கே அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மொத்தம், 34,000 கருவிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

இவ்வாறு, இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் கைவிட்ட நிலையில், தென் கொரியாவின் மருத்துவக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனமான, பயோசென்சார் உதவியுடன் ஹரியானாவின் மனேசர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில், ரேபிட் டெஸ்ட் கருவிகள் தயாரிக்கப்பட உள்ளன. இந்த வேலையானது, தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக, ஐந்து லட்சம் கருவிகள் தயாரிக்கப்பட உள்ளன.

HOT NEWS