பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா!

28 May 2020 அரசியல்
indianarmy1.jpg

சீனாவின் எச்சரிக்கையாக அமைந்துள்ள படைகள் குவிப்பிற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவமும் தங்களுடைய படைகளை லடாக் பகுதியில் குவிக்க முடிவு செய்துள்ளது.

கடந்த சில வாரங்களாக, இந்தியாவினை அச்சுறுத்தும் விதமாக சீன அரசாங்கம், தன்னுடைய இராணுவத்தினை இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் குவித்து வருகின்றது. தற்காலிக விமான தளம், போர் விமானங்கள், 10,000 போர் வீரர்கள் என பலவித போர் முயற்சிகளில் சீன அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இது குறித்து, இந்தியப் பிரதமர் மோடி இந்திய இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், லடாக் பகுதியில் உள்ள இந்தியப் படைகளை திரும்பப் பெறும் இல்லை என, இந்திய இராணுவம் தரப்பில் பேசப்படுகின்றது. அத்துடன், நிலைமையை ஈடுகட்டும் விதமாக, இந்திய தரப்பில் இருந்தும், பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் செயல்கள் விரைவில் தொடங்கப்படும் என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS