தென் சீனக் கடலில் இந்திய போர் விமானம்! அதிகரித்துள்ள பதற்றம்!

31 August 2020 அரசியல்
shipcannon.jpg

தென் சீனக் கடலுக்கு தற்பொழுது இந்தியப் போர் விமானம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், நாளுக்கு நாள் மோதல் முற்றிக் கொண்டே உள்ளது. இதில், இந்தியா தன்னுடைய இராணுவ வலிமையை அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த ஜூன் 15ம் தேதி அன்று, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இந்திய இராணுவ வீரர்கள் மீது, சீன இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக நடத்தியத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனா தன்னுடைய இராணுவத் துருப்புக்களை அதிகரிக்க ஆரம்பித்தது.

இதனையொட்டி, இந்திய இராணுவம் தன்னுடைய இராணுவத் துருப்புக்களை அப்பகுதிக்கு அனுப்ப ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில், ரபேல் போர் விமானத்தின் முதல் பிரிவும் இந்தியாவிற்கு வந்தது. அதுமட்டுமின்றி, இந்திய இராணுவம் அவசரமாக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையினைப் பயன்படுத்தி, புதிய ரக ஆயுதங்கள், அதி நவீன ஏவுகணைகள் என, ஆயுதங்களை வாங்கிக் குவித்தது.

இந்நிலையில், அமெரிக்க போர் கப்பல்களும், தென் சீனக் கடற்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டன. இதனை சீனா கடுமையாக எதிர்த்தது. இது எங்கள் நாட்டிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றுக் கூறியது. இருப்பினும், அதனைப் பற்றி எல்லாம், அமெரிக்கா கண்டுகொள்ளவே இல்லை. இந்த சூழ்நிலையில், தற்பொழுது இந்திய கடற்படையும் தன்னுடைய போர்கப்பலை தென் சீனக் கடலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதன் காரணமாக, தற்பொழுது இரண்டு நாடுகளுக்கு இடையிலும், பிரச்சனை முற்றியுள்ளதாக தெரிகின்றது. பலக் கட்டங்களாக நடைபெற்ற, அமைதிப் பேச்சுவார்த்தையானது ஒரு முடிவிற்கு வராத நிலையில், இந்த செயலில் இந்திய கடற்படை இறங்கி உள்ளது.

HOT NEWS