இந்தியா அமெரிக்க கடற்படை கூட்டுப் பயிற்சி! சீனா அச்சம்!

21 July 2020 அரசியல்
navydrill.jpg

இந்தியாவும் அமெரிக்காவும் இந்தியப் பெருங்கடலில், கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளன.

தென்சீனக் கடலானது, சீனாவிற்கு சொந்தம் என சீன அரசாங்கம் உரிமைக் கொண்டாடி வருகின்றது. இதனால், சீனாவின் ஆதிக்கம் மற்றும் அத்துமீறலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தென்சீனக் கடலுக்கு தன்னுடைய கடற்படையின் அதிக வலிமையுள்ள கப்பல்களான யூஎஸ்எஸ் நிமிட்ஸ் மற்றும் யூஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் ஆகியக் கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பியது அமெரிக்கா.

இதனால், சீனாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. தற்பொழுது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் கடும் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால், இந்தியாவின் கடற்படைக் கப்பல்களும் தற்பொழுது தீவிர ரோந்து பணியில் ஈடுட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், இன்று அமெரிக்க கடற்படைக் கப்பல்கள், இந்தியாவின் கடற்பகுதிக்கு வந்துள்ளன. அந்த இரண்டுப் போர்க்கப்பல்களும், இந்தியாவின் கடற்படைக் கப்பல்களுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளன.

இதனால், சீனா கலக்கம் அடைந்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் பல ஆண்டுகளாக நேச நாடுகளாக இருந்து வருகின்றன. இந்த இரண்டு நாடுகளும், தற்பொழுது போர் பயிற்சியில் ஈடுபடுவதால், சீனா தன்னுடைய கடற்படைப் பாதுகாப்பினை முடுக்கிவிட்டுள்ளது.

HOT NEWS