பிங்க் பால்னா என்ன சிவப்பு பால்னா என்ன! இந்தியா இதிலும் முன்னிலை!

23 November 2019 விளையாட்டு
ishantsharma11.jpg

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள வங்கதேச அணியானது, மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. டி20 தொடரினை இந்தியா எளிதாக வென்றது. இதனையடுத்து, டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றது. நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடர்ன் கார்டன் மைதானத்தில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இந்தப் போட்டியானது, இரவு பகல் ஆட்டமாக நடைபெற்று வருகின்றது. இதனை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஈடர்ன் கார்டன் வழக்கப்படி, அங்குள்ள மணியினை கொல்கத்தாவின் தாதா என அழைக்கப்படும் சௌரவ் கங்குலி மணி அடித்துத் துவக்கி வைத்தார். அந்தப் போட்டியின் பொழுது, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. அந்த அணி தன்னுடைய முதல் இன்னிங்சில், 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 106 ரன்களை குவித்தது. அந்த அணியின் வீரர்கள் ஷேத்மான் இஸ்லாம் 29(52), இம்ரூல் காயீஸ் 4 (15), மொமீனுல் ஹோக்கூயூ 0(7), மொஹமத் மிதூன் 0(2), முஸ்பிகூர் ரஹீம் 0(4), மஹ்மதுல்லா 6(21), லிட்டன் தாஸ் 24(27), நயீம் ஹசன் 19(28), எபோதத் ஹோஸைன் 1(7), மெஹீதி ஹசன் 8(13), அல் அமீன் ஹோசைன் 1(4) மற்றும் அபு ஜெயீத் 0(3) ரன்கள் குவித்தனர்.

இந்திய அணியின் வீரர்கள், இஷாந்த் ஷர்மா அபாரமாக பந்து வீசி 12 ஓவரில் 4 மெய்டன் ஓவர் எடுத்து, 22 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர், இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்சினை விளையாட களமிறங்கியது.

இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 46 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு, 174 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 14(21), ரோகித் ஷர்மா 21(35), சத்தீஸ்வர் புஜரா 55(105), விராட் கோலி 59(93), அஜிங்கியா ரஹானே 23(22) ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணியின் எபதத் ஹோசைன் இரண்டு விக்கெட்டுகளையும், அல் அமீன் ஹோசைன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

HOT NEWS