ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பும்ரா! இந்திய அணி முன்னிலை!

01 September 2019 விளையாட்டு
jaspritbumrah.jpg

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி தற்பொழுது வழுவான நிலையில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்நிலையில் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 140 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 416 ரன்கள் குவித்தது. ஹனுமா விஹாரி 111, இஷாந்த் ஷர்மா 57 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில், ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும், கார்ன்வால் 3 விக்கெட்டுகளையும், ரோச் மற்றும் பிராத்வொயிட் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, தடுமாறி வருகிறது. பிராத்வொயிட் 10, ஹெட்மயிர் 34, ஹோல்டர் 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆரம்பம் முதலே ஆட்டத்தில், ஆதிக்கம் செலுத்தினர். ஜஸ்பிரித் பூம்ரா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். முகம்மது ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினார். இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 329 ரன்கள் எடுக்க வேண்டி உள்ளது.

HOT NEWS